ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் நினைவேந்தல் நாடாளுமன்றிலும் ஒரு நிமிட அஞ்சலி!

Wednesday, April 21st, 2021

பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45 க்கு, நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து மக்களிடமும் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ். மரியன்னை தேவாலயத்தில் காலை 8.45 மணி அளவில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு மெழுகுதிரி ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகளும் இடம்பெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து மக்களிடமும் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டு ஆண்டுகால நினைவு தினத்தை முன்னிட்டு, நாடுமுழுவதும் உள்ள அனைத்து தேவாலங்களில் இன்றைய தினம் விசேட ஆராதனையுடன் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன், ஏனைய மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட வழிபாடுகளுடன், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: