இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு மலேசியா செல்வதற்கு பயணத் தடை – மலேசிய போக்குவரத்து அமைச்சு!

Sunday, May 9th, 2021

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தடை உத்தரவினை மலேசியா பிறப்பித்துள்ளது.

அதன்படி இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு நேற்று 8 ஆம் திகதிமுதல் மலேசியாவிற்குள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் 1961 ஆம் ஆண்டின் இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் கூறப்பட்டுள்ளபடி, இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த தடையுத்தரவில் விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சிரேஷ்ட அமைச்சர் இஸ்மாயில் யாகூப் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்பதாக மலேசிய போக்குவரத்து அமைச்சு ஏப்ரல் மாதத்தில் இந்திய பிரஜைகள் மற்றும் பயணிகளின் நுழைவைத் தடுத்து நிறுத்தியதுடன், தெற்காசிய நாட்டிலிருந்து கப்பல்கள் வருகைக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: