இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறிய எதிர்பார்ப்பு!

Wednesday, December 20th, 2023

2023-2025 வரையான காலப்பகுதியில் இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறிய ஜனாதிபதி செயலகம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திறந்த அரச கூட்டிணைவு” என்பது சிவில் சமூக மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான கூட்டிணைவின் ஊடாக  வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் திறந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகும்.

இதுவரையில் 75 நாடுகளும், 104 உள்ளூராட்சி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கிலான சிவில் சமூக அமைப்புக்களும் திறந்த அரச கூட்டிணைவு வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்டுள்ளன. 

திறந்த அரச கூட்டிணைவு வேலைத்திட்டத்தின் உறுப்பினராக இலங்கை, 2023 – 2025 வரையான காலப்பகுதிக்கான செயல் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு, அதன் பின்னர் அமைச்சரவை அனுமதியுடன் அரச மற்றும் சிவில் தரப்பினர்களுடன் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

திறந்த அரச கூட்டிணைவு வேலைத்திட்டத்தின் இணை செயற்பாட்டாளராக தங்களது பெறுமதியான ஆலோசனைகளை வழங்குவதற்கான வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கைக்குள் திறந்த, ஒத்துழைப்புடன் கூடிய பொறுப்புக்கூறும் அரச நிர்வாக முறைமையொன்றை மேம்படுத்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.presidentsoffice.gov.lk ஊடாக காணலாம் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: