எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!

Thursday, March 2nd, 2017

கடந்த மாத புள்ளி விபரங்கள் படி, எச்1என்1 நோய்த்தாக்கத்துக்கு என 42 நோயாளர்கள் சிறப்புச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அவர்களில் 9 நோயாளர்கள் மட்டுமே பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது எனவும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பன்றிக்காய்ச்சல் தாக்கத்துக்குள்ளான 9 பேரும் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர். கடந்த சில நாள்களாக பன்றிக்காய்ச்சல் நோய்த்தாக்கம் தொடர்பாக மாறுபட்ட செய்திகள் வெளிவரவிருக்கின்றன. சில வாரங்களான நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இவ்வாண்டு ஏற்பட்ட மாறுபட்ட குளிர் மற்றும் அசாதாரண மழைவீழ்ச்சி காரணமாக கடந்த ஆண்டை விட நோய்தொற்றுக்கள் இவ்வருடம் அதிகரித்து காணப்படுகின்றது,

ஆனாலும் இந்தத்தொற்று நோய்கள் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரின் சேவைகளினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இன்புளுவென்சா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நோய்க் குணங்குறிகளுடன் வருபவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து பொருத்தமான சிகிச்சைகளை அளிக்கின்றோம். நெருக்கமான இடங்களில் சேருவதைத் தவிர்த்தல், தடிமல், இருமல் நோயாளிகள் கைக்குட்டை போன்றவற்றைப் பாவித்தல், கை கழுவுதல், பொன்ற சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சுவாசம் சம்பந்தமான தொற்று நிலையில் இருந்த மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். என்றுள்ளது.

large_109615

Related posts: