இலங்கையில் இஸ்லாமிய குழுக்கள் மீது தடை- தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.!

Tuesday, April 13th, 2021

இலங்கையில் பதினொரு இஸ்லாமிய குழுக்கள் மீது தடை அறிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் இந்திய மண்ணிலிருந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை வழிநடத்த படகு மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கக்கூடும் என்ற அச்சமே இத்த நடவடிக்கைகக்க காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான எச்சரிக்கையை அடுத்து தமிழக காவல்துறையினர் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக “த இந்து” செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சமீபத்தில் ஒப்புதல் வழங்கினார். இந்த அமைப்புகளில் இலங்கை தவீத் ஜமாத் அடங்கும்.

அத்துடன் ஐக்கிய தொவ்ஹீத் ஜமாத், இலங்கை தவீத் ஜமாத், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், அனைத்து இலங்கை தொவ்ஹீத் ஜமாஅத், ஜாமியதுல் அன்சாரிஸ் சுன்னத்துல் மொஹமதியா, தாருல் ஆதார், ஜாமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், இஸ்லாமிய அரசு, ஈராக் இஸ்லாமிய அரசு முத்துக்களைக் காப்பாற்றுங்கள், மற்றும் சூப்பர் முஸ்லீம் என்பனவும் தடைசெய்ய பரிந்துரைக்கப்பட்ட அமைப்புகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: