இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது – மரணமானவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 374 ஆக உயர்வு!

Thursday, June 17th, 2021

நாட்டில் கடந்த 24 மணி நெரத்தில் 2 ஆயிரத்து 436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்- 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைந்தனர். தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று உறுதியான 34 ஆயிரத்து 232 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றால் நேற்று மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.

இதில் 28 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சசு குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கையில் கொரோனா வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை  2 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் ...
வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் - பொதுஜன பெரமுன கட்சியின் பொத...