வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் – பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

Friday, October 6th, 2023

வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை செய்துவருகின்றன என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுப்பற்று  இல்லாமல்,  அதிகாரத்துக்காக அலையும் தரப்புகளே இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு போலியான தகவல்களை வழங்கி நாட்டை இரண்டாம் தரத்துக்கு தள்ள முற்படுகின்றன.

ஆயுத போராட்ட காலத்தில், எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆயுத போராட்ட அமைப்புக்களால் போலியான தகவல்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் வடக்கில் உள்ள சில தமிழ்க் கட்சிகள் அந்த வேலையை செய்து வருகின்றன.

போரை மஹிந்த ராஜபக்ச முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, பொய்யான காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையையே வெளியிட்டு வருகின்றது.

இதனை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டி இருந்தோம். எதிரணியில் அப்போது இருந்த தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. எனினும், ஜனாதிபதி தற்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளமையை இட்டு நாம் பெருமை அடைகின்றோம் எனவும் தெரிவித்தார்

000

Related posts:

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொது சுகாதார ஆய்வாளர்க...
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் இன்று - நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பூஜை வழிபாடுகள்!
இலங்கை முழுமையாக இருளில் இருந்து வெளியேறவில்லை - நம்பிக்கை அளிக்ககூடிய அறிகுறிகளே காணப்படுவதாக அமைச்...