யாழ் மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிராக சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, December 28th, 2020

பிங்கர் பிரிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர் செய்ய வேண்டுமென்று தெரிவித்து ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.மாநகர சபை ஊழியர்கள் கவனீர்ப்புப் போராட்டடமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட குறித்த இயந்திரம் அண்மையிலேயே பொருத்தப்பட்டதாகவும் அது தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், அதனைத் திருத்துவதற்காக 300 ஊழியர்களிடம் தலா 1000 ரூபா கழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த இயந்திரத்தினை அனைத்து ஊழியர்களும் பயன்படுத்துவதால் கொரோனா பரவும் அபாயம் காணப்படுவதாகப் பல தடவைகள் தெரிவித்தும் நிர்வாகத்தினர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,மாநகரசபை நிர்வாகத்தின் இயந்திரம் செயலிழந்தால் அதனைத் திருத்துவதற்கு நிர்வாகத்தின் பணத்தினை செலவிடவேண்டுமே தவிர, எதற்காக ஊழியர்களின் பணத்தினை எடுக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

உயர் அதிகாரிகளின் பாவனையில் உள்ள இலத்திரனியல் பொருட்கள் பாதிப்படைந்தால் அவற்றைச் சீர் செய்வதற்கு அவர்களின் பணம் பெறப்படுகின்றதா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related posts:


நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நே...
விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு இன்றுமுதல் அனுமதி - பல்கலை மானியங...
அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போது மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டும...