பால்மா விவகாரம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்பு!

Monday, November 28th, 2022

பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார்.

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை சுங்கம் மறுத்துள்ளது.

அந்நிய செலாவணியை சட்டவிரோதமாக கையாள்கின்றமை குறித்து பால்மா நிறுவனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டொலர் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளால் பால்மா இறக்குமதி 50% குறைந்துள்ளதாகத் தெரிவித்த வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, பால்மா இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு சில டொலர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சுங்கத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: