இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விமர்சிப்பவர்களும் காரணமாகயிருந்தார்கள் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2023

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் காரணம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போது பிளவுபட்டுள்ள எதிர்கட்சியில் உள்ள அவரை விமர்சிப்பவர்களும் நிதி நெருக்கடிக்கு காரணமாகயிருந்தார்கள் என தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் அவர்மேலும் கூறுகையில் –

நான் ராஜபக்ச பரம்பரையின் பிரதிநிதியில்லை. ஆளும் பொதுஜன பெரமுனவும் எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போது பிளவுபட்டுள்ளன.

அத்துடன் இலங்கை தனது தசாப்த கால வரலாற்றில் எதிர் கொண்ட மிக மோசமான நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த கோட்டாபய ராஜபக்ச முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்ற கேள்விக்கு, ஆம் அதைத்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் காணப்பட்ட ஜனாதிபதி இந்த நெருக்கடிகள் அவர்கள் காலத்தில் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார்.

மே 2022 இல் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகிய பின்னரும் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு எதிர்கட்சியினர் முன்வராததை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் காரணமாக முழு அரசியல் அமைப்பும் வீழ்ச்சியடைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நாட்டின் அரசியல் அதிகளவிற்கு தலைகீழாக காணப்பட்டது, அனைவரும் அதிகளவில் பொறுப்புணர்வு அற்ற விதத்தில்  நடந்துகொண்டனர்.

ஆகவே அதனையும் நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் தனியாக ஒரு விடயத்தை மாத்திரம் கருத்தில் கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: