விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு இன்றுமுதல் அனுமதி – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Wednesday, December 29th, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 வீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றிரவு (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து கதவுகளும் திறந்தே இருக்கின்றன - ஜனாதிபதி!
கல்விமுறை மாணவர் மீது அழுத்தத்தைக் கொடுக்கின்றது - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சிகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
|
|
|


