மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் – அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022

21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்றை உருவாக்குவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மன்ற கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர்களை பாராட்டும் வேலைத்திட்ட நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில் –

21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்ற உருவாக்குவதற்கான காலம் தற்போது உணரப்பட்டுள்ளது. இதற்கு கட்சி பேதமின்றி கொள்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றினைந்து முன்னெக்க வேண்டும்.

வறுமை, அடிப்படை வாதம், பயங்கரவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கல்வி அனைவருக்கும் சமமான முறையில் கிட்டாமையே ஆகும் என்று அவர் கூறினார்.

பாடங்களை மனனம் செய்யும் அடிப்படை பரீட்சை முறைக்கு பதிலாக புதிய பரீட்சை முறையை அமுல்படுத்த வேண்டும் என்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: