தேயிலை துறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முதலீடு!

Thursday, July 12th, 2018

நாட்டின் தேயிலை உற்பத்தி துறையில் முதலீட்டை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

தேயிலை உற்பத்தித் துறைகளில் நிதியிடலை மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் குறித்து பூரண ஆய்வை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் 2019ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டிலுள்ள தேயிலைத் தோட்டங்கள் பலவற்றில் பழமையான தேயிலை மரங்களே உள்ள நிலையில், அவற்றை புதிதாக மீள்நடுகை செய்வதற்கு முதலீடு தேவைப்படுவதாக, அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்தால், வருடாந்தம் 400மில்லியன் தொடக்கம் 450 மில்லியன் கிலோ வரையான தேயிலையை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: