நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Friday, July 10th, 2020

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று எம்மோடு போட்டியிடுகின்றனர். எதிர்வரும் தேர்தலில் தற்போதையை அரசாங்கம் வெற்றிபெறும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் இவர்களுக்குள் பெரும்பாலானவர்கள் ஆட்சியை கைப்பற்றுவதற்காகப் போட்டியிடவில்லை.

அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றுவதற்காகவே அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அப்படியானால் அவர்கள் நீதிமன்றம் ஊடாக அதனை கைப்பற்றியிருக்கலாம்.

19 ஆவது அரசியலமைப்பின் ஊடாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ - பிரேத பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்ப...
கொரோனா தொற்றால் மேலும் 111 பேர் உயிரிழப்பு - புதிதாக 2 ஆயிரத்து 953 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதா...
தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவி...