பொருத்தமில்லாத போட்டித்தன்மை ஊடாக சிறார்களின் மனங்கள் மாற்றமடைகின்றன – உயர் கல்வி அமைச்சர்!

Friday, November 30th, 2018

பொருத்தமில்லாத போட்டித் தன்மைகளின் ஊடாக தற்போது பெருமளவிலான சிறார்களின் மனம் மாற்றம் அடைவதுடன் தற்போதைய நாட்டின் குற்றங்கள், வன்முறைப்போக்கான செயல்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது என கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

எமது நாட்டின் கல்வி முறையின் ஊடாக திறமையானவர்களை உருவாக்கினாலும் புத்திசாலிகள் உருவாக்கப்படுவது கிடையாது. வாய்ப்பாடம் மூலம் மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெற்றவர்களாக முன்செல்வது மாத்திரம் போதாது. சிறார்களின் மனம் விருத்தி அடைவதற்கான பக்க பலத்தை எமது கல்வியின் ஊடாக வழங்க வேண்டும்.

அண்மைக்காலமாக நாட்டின் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் மோசமான செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களின் மனப்பாங்கை விருத்தி செய்வதற்கும் உணர்ச்சி வசப்படுவதனை கட்டுப்படுத்துவதன் இயலாமையே எடுத்துக்காட்டுகின்றது. கல்வி தரத்தை விருத்தி செய்வதன் ஊடாக இந்த நிலைமையை மாற்றியமைக்க முடியும் என்றார்.

Related posts: