கொவிட் தொடர்பான தவறான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூரியூப் தளத்திலிருந்து நீக்கம்!

Thursday, August 26th, 2021

உலகளாவிய பெருந்தொற்றான கொரோனா  தொடர்பில், தவறான மற்றும் ஆபத்தான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூரியூப் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூரியூப் சமூக வலைத்தளம், அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கொவிட் பரவல் உட்பட பிற விடயங்கள் தொடர்பில் தவறான மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசியல் தலைவர்கள் தமது தரப்பு மீது குற்றம் சுமத்தியுள்ளதாக யூரியூப் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொவிட்-19 பரவல் தொடர்பில், உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளின் நிபுணர்களது கருத்துக்களுக்கு முன்னுரிமையளிக்க யூரியூப் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு காணொளியையும் நீக்குவது தமது கொள்கையாகும் என யூரியூபின் பிரதான தலைமை அதிகாரி நீல் மோஹன்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: