ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கை ஆராய்வு – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சகத்தை முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை இலங்கை பின்பற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் சார்க் பிராந்தியத்தில் உள்ள நாடு என்பதால் ஆப்கானிஸ்தானின் நிலைமையை இலங்கை கவனத்தில் எடுத்துள்ளது என்றும் டலஸ் அழகப்பெரும கூறினார்.

தலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் உருவாகும் அரசாங்கம் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு விவாதித்து அறிவிக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்று வருவதால் இலங்கை வருத்தமடைவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலங்கையின் புதிய வருமானச்  சட்டம், முதலாளிகளுக்கு மட்டுமே  சார்பானது எச்சரிக்கின்றனர் பொருளாதார வலுன...
துறைமுக அதிகார சபையின் கீழ் கிழக்கு முனையம் முழுமையாக பராமரிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ரரஜபக்ச உறுத...
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்தாகும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...