துறைமுக அதிகார சபையின் கீழ் கிழக்கு முனையம் முழுமையாக பராமரிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ரரஜபக்ச உறுதி!

Monday, February 1st, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே தெரிவித்துள்ளார்.

அதனுடன் இதுதொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே மேலும் தெரிவிக்கையில் –

“குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான அறிவிப்பு நாளையதினம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளையதினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம்.

அத்துடன் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நாளையதினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: