பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, May 8th, 2021

சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுசெல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபல பாடசாலைகளுக்கு செல்வது என்பது தற்போதைய மாணவர்களின் நோக்கமல்ல எனவும், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதிலேயே பெற்றோர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை பெற்ற ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் மாணவர்களான நவினி ரவிஷ்கா மற்றும் பானுக விக்ரமசிங்க ஆகிய இருவரும் அலரி மாளிகைக்கு வருகை தந்து தங்களது பெறுபேறுகளை அறிவித்தபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நவினி ரவிஷ்கா என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தையும், பானுக விக்ரமசிங்க என்ற மாணவன் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.

தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது பாடசாலை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியாகும். அங்கு 6 ஆயிரத்து 800 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 315 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்ககது.

Related posts: