அரச ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு!

Friday, June 16th, 2017

நாடு எதிர்கொண்ட அனர்த்த நிலையை அரசாங்கத்திற்கு வெற்றிகரமாக எதிர்க்கொள்ள முடிந்தமைக்கு பிரதான காரணம் அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாலிந்த நுவர பிரதேச செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.மேலும் , எதிர்வரும் காலத்தில் இடம்பெறக்கூடும் இவ்வாறான அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் முறையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளார்.

Related posts: