தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Saturday, October 30th, 2021
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அட்டையை சோதனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கொமாண்டர் நிலான் மிரெண்டா குறிப்பிட்டுள்ளார்..
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதுடன், நாளை மறுதினம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
000
Related posts:
வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
புதிய செயலாளர்கள் இன்று நியமனம்!
சில சேவைகள் வழமைக்கு திரும்ப 6 மாதங்கள் செல்லும் - அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!
|
|
|


