சில சேவைகள் வழமைக்கு திரும்ப 6 மாதங்கள் செல்லும் – அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

Tuesday, March 31st, 2020

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஏப்ரல் மாதம் இறுதி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது மக்களின் பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையாவது விதிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்ட அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது ஒருவரில் இருந்து மற்றுமொருவருக்கு மாறும் காலத்தில் இருப்பதாகவும் நாட்டிற்குள் கொரோனா அலை ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலவும் நிலைமையின் கீழ் சில சேவைகள் வழமைக்கு திரும்ப குறைந்தது ஆறு மாத காலம் செல்லும் எனவும் மருத்துவர் குணசேன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: