மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!
Wednesday, March 30th, 2016
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் கைக்குண்டுகளும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்! வர்த்தமானி அறிவித்தல்
குப்பைகளை விரைவாக அகற்றுமாறு பிரதமர் ஆலோசனை!
மணல் விலையில் மாற்றம் – மாற்று திட்டம் தயார்!
|
|
|


