வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்வு செய்ய துரித நடவடிக்கை – பஷில் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, October 24th, 2020

குடும்பங்களுக்கான பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  

இது தொடர்பாக நேற்றையதினம் பிரதமர் அலுவலகத்தில் பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் செயலாளர் பஷில் ராஜபக்க்ஷவின் தலைமையின் கீழ் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டுப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றினூடாக உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கு இந்த தேசிய வேலைத்திட்டம் உதவுவதாக ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரச அலுவலகங்களுடன் இணைந்து நாட்டிலுள்ள 25 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த தேசிய வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: