அதிவேக தபால் சேவை தீவுப் பகுதிக்கும் விரிவு!

Saturday, November 24th, 2018

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் அதிவேக தபால் சேவைகள் தற்போது படிப்படியாக பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் தீவுப் பகுதிக்கும் இந்தச் சேவை நகர்த்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணத் தலைமைத் தபாலகம் தெரிவித்தது.

மக்களுக்கு துரிதமான சேவையை வழங்கும் நோக்கிலும் தபால்துறையின் எதிர்கால இருப்பைத் தக்கவைக்கும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் அதிவேக தபால் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிவேக தபால் சேவைக்காக பல்வேறு தபாலகங்களுக்கு உந்துருளி வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தீவுப் பகுதிக்கும் இந்தத் துரித தபால் சேவை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதற்காக வேலணை தபாலகத்துக்கு தபால் விநியோகத் தேவைக்கென உந்துருளி வழங்கப்பட்டுள்ளது.

Related posts:

முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வியல் மேம்படுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செ...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரிய...
விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்ய அமைச...