அடுத்த வாரம்முதல் அனைத்து வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவிப்பு!
Thursday, September 23rd, 2021
கொரோனாவிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ளூர் மருந்துப் பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத மருத்துவ மனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துப் பெட்டியில் ஆயுர் வேத மருத்துவ மனைகளில் கொவிட் வைரஸ் சிகிச்சைக்காக தற்போது வழங்கப்படும் நோய் தடுப்பு பானம், நோய் தடுப்பு பொடி ஆகியவை உள்ளடங்கியிருக்கும் எனவும்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து இந்தப் பெட்டி முதலில் விநியோகிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு!
சீனி வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர...
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை த...
|
|
|


