அடுத்த மாதம்முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கம் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், அவர் தமது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் தொடர்பில் இன்று இலங்கை கனிய வள கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எரிபொருள் இறக்குமதி, கையிருப்பு, எரிபொருள் ஒதுக்கம், எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தம் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.
000
Related posts:
பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் இலங்கையில் கரும்புச்செய்கையை!
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எ...
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர விக்ரமநா...
|
|