பிரதமர் மஹிந்த – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலை காணொளி மூலம் கலந்துரையாடல்!

Wednesday, September 23rd, 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி தொலை காணொளி மூலம் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் மிக்க பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இந்த உச்சிமாநாடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக தெரிவானதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதன்போது, இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக தொலைகாணொளி மூலம் உச்சிமாநாடு ஒன்றை நடத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும்26 ஆம் திகதி இந்த உச்சிமாநாடு இடம்பெறவுள்ளது. அரசியல், பொருளாதாரம், நிதி, அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, கலாசார மற்றும் பரஸ்பர ஆர்வமிக்க பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சர்கள் மற்றும் இரு நாடுகளினம் சிரேஷ்ட அதிகாரிகள் உச்சிமாநாட்டில் தலைவர்களை இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

உரிமைப் போராட்டத்தில் மரணித்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவுகூரும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்க...
ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுக்கு அடிமை - புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆ...
தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கம் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவி...