மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து – நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Wednesday, September 2nd, 2020

நாட்டு மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதன் ஊடாக சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவுவதனை தடுப்பதற்கு அவசியமான முறையில் செயற்பட வேண்டும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை வரையிலான 12 மணிநேரத்தில் 59 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது  தொடர்பில் அவதானத்துடன் செயப்பட வேண்டும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை எனவும் அந்த நிலைமையை தொடர்ந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும். அதற்கு மிகவும் தெளிவான முறைக்கமைய விமானத்தில் ஒரே நேரத்தில் 200 – 300 பேர் வரையில் அழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தினுள் கொரோனா தீவரமாக பரவும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளமையினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: