தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை – அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 5th, 2024

நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களை கண்டறிதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்குதல் ஆகியவற்றை முறையாக முன்னெடுப்பதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடினமான சூழ்நிலையில் பராமரிக்கப்படும் புனிதத் தலங்களை பாதுகாப்பதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதில் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது சரிபார்க்கப்படுகின்றன. 2024 மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் அந்தந்த புனிதத் தலங்களுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதே அமைச்சின் எதிர்பார்ப்பாகும்.

இந்நாட்டின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு முறையான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படுகிறது.

அதில் சேர்க்கப்பட்டுள்ள சில விடயங்கல் தொடர்பில் அடிப்படை விதிகளை தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

“பிக்கு கதிகாவத்” சட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கான முன்மொழிவுகளை மகா நாயக்க தேரர்களாலும் சங்க சபைகளாலும் வழங்குமாறு கேட்டுள்ளோம். 

பிக்கு ஒழுக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்க முடியும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: