மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரம்!

Tuesday, May 17th, 2022

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(17) வழமை போன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று(17) நள்ளிரவுமுதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எந்த வகையிலும் பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

000

Related posts: