வடக்கின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை!

வடபகுதியில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாள் வெட்டு கும்பல்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வாள் வெட்டு கும்பல்களினால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது. சிலர் இதனை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற வகையில் பிரச்சாரம் செய்கின்றனர். வடக்கிலோ தெற்கிலோ சட்டத்தை கையில் எடுப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது.
நாட்டின் புலனாய்வுப் பிரிவு வலுவிழந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு...
மின்சார துறையின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு புத்திஜீவிகள் குழு - அமைச்சர் மஹிந்த அமரவீர!
ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!
|
|