ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை!
Friday, March 4th, 2022
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப் பட்டுள்ளது.
இக்குழு சம்பவத்தை கண்காணித்து உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்தது.
இதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண் டோவுக்கு எந்தவிதமான செல்வாக்கும் இல்லை என்பதை அவதானித்ததாக குழு குறிப்பிட்டுள் ளது.
அனைத்து உண்மைகளையும் கருத்திற்கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என விடுவிக்கப் படுவார் என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் நேரில் சென்று வாழ்த்து!
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி!
வரலாற்றில் பெரிய வித்தியாசம் உள்ளது - இலங்கையில் இந்து மதத்தின் தனித்துவத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவ...
|
|
|


