கடந்த நான்கு நாட்களில் 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

Friday, August 26th, 2016

உணவு பாதுகாப்பு வாரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் நுகர்வுக்கு தகுதியில்லாத உணவுகளை ஆகார வகைகளை விற்பனை செய்த 536 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான உணவு பாதுகாப்பு வாரத்தின் நான்காவது நாளான நேற்று (25) வரை 12,275 வர்த்தக நிலையங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு தகுதியற்ற 10,824 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பு வாரம் வரும் 29ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதுடன் 1800 பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு பூராகவும் இதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Related posts: