தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!
Friday, August 27th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாணத்துக்கு பிரவேசித்த 302 வாகனங்களில் பயணித்த 580 பேர் சோதனைச்சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
ரிஷாட் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் 3 பேர் மரணம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தோழர் ஈசனின் தாயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் க...
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று - 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொ...
|
|
|


