குடிநீர் அள்ளச் சென்ற பெண் மீது தாக்குதல் – நெடுந்தீவு சம்பவம்!
Tuesday, May 26th, 2026
…
நெடுந்தீவு மேற்கு 4ஆம் வட்டாரத்தில் குடிநீர் அள்ளச் சென்ற பெணை ஒருவர் தாக்கியதில் பெண் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை(23/05) இடம்பெற்றுள்ளது.
அத்துடன் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பெண் கடந்த சனிக்கிழமை மதியம் உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள பாடசாலை கிணற்றில்
தண்ணீர் எடுக்க சென்றபோது அந்த வழியால் வந்த நபர் தாக்கியதில் கழுத்துப் பகுதியில் பாதிக்கப்பட்டு நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றதாக தெரியவருகின்றது
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிசார் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும், தாக்குதலை மேற்கொண்டவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
6000 சீனப் பணியாளர்கள் இலங்கையில்!
மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச!
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இன்றையதினம் தீர்வையற்ற கடைதிறந்து வைப்பு!
|
|
|


