யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள பழைய வீடொன்றின் கழிப்பறையில் இருந்து டீ 56 ரக துப்பாக்கிகள் 8 மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
கழிப்பறை பாவனைக்கு என வீட்டு உரிமையாளர்கள் குழி தோண்டியுள்ள போதிலும் அவர்கள் அதனை கழிப்பறையாக பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் அந்த குழிக்குள் இந்த துப்பாக்கி எவ்வாறு வந்ததென தெரியாது என்று வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் போரின் போது வீட்டை கைவிட்டு சென்றவர்களாகும்.
அவர்கள் கைவிட்டு சென்ற பின்னர் விடுதலை புலிகள் இந்த கழிப்பறை குழிக்குள் துப்பாக்கிகளை போட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
|
|