பொது இடங்களில் தீ மூட்டுவதற்குத் தடை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை முல்லை மாவட்ட பொலிஸ் அத்தியகட்சர் காரியாலம்!

Friday, October 14th, 2016

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச காட்டுப்பகுதிக்குள் தொடக்கம் பிரதான வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைகளுக்கு அருகிலுள்ள புல்பற்றைகள் உட்பட பொது இடங்களில் தீ மூட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியகட்சர் காரியாலயத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக காலநிலை மாற்றத்தினால் கடும் வரட்சி நிலை காணப்படுகின்றது. இந் நிலையில் புல் தரைகள் தொடக்கம் பயன் தரும் மரங்கள் வரை வாடிக் கருகியுள்ள நிலையில் சில விசமிகள் அதற்கு தீ மூட்டி வருகின்றனர். அண்மையில் திருமுறுகண்டி, மணவாளன் பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் காணப்படும் அரச காட்டிற்கு விசமிகள் தீ மூட்டியுள்ளனர்.

இந்த தீ பொதுமக்கள், பொலிஸ், இராணுவத்தினர் ஆகியோரின் பெரும் பங்களிப்புடன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது. இதே வேளை ஏ-9 வீதி அருகிலும் புகையிரதப் பாதைக்கு அருகிலும் வீதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பதிக்கப்பட்டிருந்த புல் தரைக்குள் சில விசமிகள் தீ மூட்டியுள்ளனர். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருந்து சட்ட விரோத செயற்பாடுகளிலும் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு 076 622 4949, 076 622 6363 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை வழங்கியும் அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ளுமாறும் அத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Frifire8

Related posts: