மக்கள் முன்னிலையில் 37 கோடி பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு!

Saturday, January 6th, 2018

மக்கள் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க தேவையான சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசேட அதிரடிப்படையின்போதைப்பொருள் மற்றும் பாரதூரமான குற்றச் செயல்களை அடக்கும் பிரிவினரால் 375,506,864.37 ரூபா பெறுமதியான ஹெரோயின் சட்டவிரோதசிகரட்டுகள் மதுபானங்கள் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றிய ஹெரோயினின் பெறுமதி 136,119,250.00 ரூபாவும் சட்டவிரோத சிகரட்டுகளின் பெறுமதி 35,330,800.00 ரூபாவும் மதுபானங்களின் பெறுமதி 90,199,732.65 ரூபாவும்  கஞ்சாவின்  பெறுமதி 113,857,081.72 ரூபாவும் என  அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு - இர...
எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து - லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை ...
தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு - விசேட வைத்திய...