மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் வலியுறுத்து!

Tuesday, June 27th, 2023

தாங்களாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு எங்களைப் பொறுத்தவரை குறைவாக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்’ளார்.

யாழ்ப்பாணத்தில் குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தானங்களிலே சிறந்த தானம் இரத்த தானம். உடல் பாகங்களை தானம் செய்வது கண் தானம் செய்வது போன்ற பல்வேறு தானங்கள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரத்ததானம் வழங்குவதில் தற்பொழுது முழுமையாக நாங்கள் வளர்ச்சி பெறாவிட்டாலும் முன்னேற்றமாக உள்ளது என்பது பலராலும் உணரப்பட்ட ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இருந்தபோதிலும் அதை முன்வந்து தானம் செய்ய வேண்டும் என்ற அந்த விழிப்புணர்வு எங்களைப் பொறுத்தவரை குறைவாக இருப்பது எல்லா இடங்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இப்பொழுது பலர் அதற்கு ஆக்கமும் ஊக்கமளித்து தாங்களாக முன் வந்து இரத்த தானத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு செயற்படும் நபர்களுக்கு நாங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கு மாகாணத்திலே யுத்த காலத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம். யுத்த காலத்தில் இரத்தம் என்பது உயிர் காக்கும் ஒரு விடயமாக காணப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் நான் அரசாங்க அதிபராக இருந்தபோது யுத்தம் மற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்ததானம் வழங்குவதில் நாங்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கி இருந்தோம். அந்த காலத்தில் இரத்ததான விழிப்புணர்வை பல்வேறுபட்ட மட்டங்களில் மேற்கொண்டு இரத்த வங்கி மூலம் செயல்படுத்தி தான் பல உயிர்களை காப்பாற்றி இருந்தோம் எனவே இரத்த தானம் என்பது ஒரு முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.

மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும். பொதுவாக நாங்கள் செய்கின்ற விடயம் அவர்களை சேவை செய்யும்படி கூறிவிட்டு குற்றச்சாட்டுகளை மாத்திரம் குறைகளை கூறுவதற்கு மாத்திரம் நாங்கள்  இருப்பதாக கற்பனை செய்து கொள்கின்ற ஒரு விடயம் எங்களிடம் காணப்படுகின்றது.

அதை விடுத்து அவர்களோடு இணைந்து எமது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து சில விடயங்களை செய்ய வேண்டும்.

எனவே சமூகப் பொறுப்பினை நாங்களாகவே உணர்ந்து செயற்பட்ட இரத்த கொடையாளர்கள் இன்றைய தினம் கௌரவிக்கப்படுகின்றார்கள் எனவே இதே போல பல குருதிக்கொடையாளர்கள் எதிர்வரும் காலத்தில் உருவாக வேண்டும்.

அதேபோல மாகாண சபை ஆளுகைக்குட்பட்ட உத்தியோகத்தர்கள் அதேபோல் அரச உத்தியோகத்தர்களிடையே இரத்ததான உணர்வினை ஏற்படுத்த முனைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: