அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Sunday, February 18th, 2024

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (16) பொறுப்பான அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சந்திப்பில் மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை கட்டிடங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: