பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, April 10th, 2024அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்லாமிய பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதி...
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்க...
கல்வியாண்டுக்கான பாடநூல்கள் மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் - கல்வி அமைச்சர்...
|
|
|


