கல்வியாண்டுக்கான பாடநூல்கள் மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, February 17th, 2023

எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முதற்கட்டமாக, பின்தங்கிய மாகாணங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் . அதன்பின் தலைநகரை சுற்றியுள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று தவறான செய்திகள் மற்றும் பொருளாதார சவால்களையும் முறியடித்து அரச பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கும் உரிய நேரத்தில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறிய அமைச்சர், உரிய நேரத்தில் தேவையான பணத்தை அவ்வப்போது வழங்கிய திறைசேரியின் ஆதரவை பாராட்டிய அமைச்சர், எதிர்காலத்திலும் இதே ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பாடப்புத்தக வகைகளில் படிப்படியாக மாற்றம் வரலாம், இந்த வருடத்தின் முதல் தவணையில் தகவல் தொழில்நுட்ப பாடம் புதுப்பிக்கப்படும். ஆரம்ப வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடத்தை ஆரம்பிப்பதற்கு 13,700 ஆசிரியர்களுக்கு தற்போது பயிற்சியளிக்கப்பட்டுகின்றது.. கடந்த சில மாதங்களில் திட்டமிடப்பட்ட இந்த கல்வி மாற்ற செயல்முறைகள் அனைத்தும் இப்போது செயல்பாட்டு மட்டத்தில் செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

தரம் 6 முதல் தரம் 11 வரையிலான பாடங்கள் தொடர்பான அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். வழமையாக, ஒரு வருடத்திற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபா செலவாகும். இருந்த போதிலும், இம்முறை அதற்காக 16 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்தியக் கடன் உதவியின் கீழ், மூலப் பொருட்களை பெற்றுக் கொண்டு, அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் 45 சதவீதமான பாடப்புத்தகத் தேவையை பூர்த்தி செய்தது. எஞ்சிய 55 சதவீத பாடப்புத்தகத் தேவை, 22 தனியார் அச்சகங்களில் அச்சிடப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: