விமானிகள் பணிப்புறக்கணிப்பு – விமான சேவைகள் இரத்து!
Tuesday, September 10th, 2019
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பள பிரச்சினையை முன்வைத்து நேற்றுமுதல் இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.
பல மாதங்களாக சம்பள பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
Related posts:
வலி. வடக்கில் பலாலி, தையிட்டிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு !
எல்லை நிர்ணய அறிக்கை பெப். 4 ஆம் திகதி கையளிப்பு!
2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!
|
|
|


