வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!

Wednesday, April 18th, 2018

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் போதிய ஆளணி வசதிகளின்றி இயங்கி வருவதால் உரிய சேவைகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இயங்கி வரும் அரச திணைக்களங்களில் தொடர்ந்தும் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் காணப்படுவதனால் இங்கு சேவைபெறும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாந்தை கிழக்கு பிரதேச கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்தும் ஆளணிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதனால் மக்கள் சேவை பெறுவதில் சிரமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி திணைக்களம் மூன்று கால்நடை அபிவிருத்திப் பேதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

இதேவேளை திணைக்களத்தில் மூன்று தொழிலாளிகள் கடமையாற்ற வேண்டிய நிலையில் இரண்டு பேர் மட்டுமே கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளதுடன், அலுவலக கடமை நேரம் அல்லாத ஏனைய நேரங்களில் அலுவலக திறப்புக்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியுள்ளது.

இதனால் மேலதிக நேரங்களில் மக்களுக்கான தமது சேவைகளை வழங்க முடியாதுள்ளதாகவும் மேற்படி திணைக்களத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: