வரி அறவீடு அதிகரிக்கப்படுவதே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் – நிதி அமைச்சர் அலிசப்ரி சுட்டிக்காட்டு!

Sunday, May 1st, 2022

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழி முறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். அதனைத் தவிர வேறு வழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்யக் கூடிய நிலைமையில் உள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தற்போது நடைமுறையிலுள்ள வரி வீதம் எந்தளவிலும் போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வரி வீதத்தை நூற்றுக்கு 13 ௲ 14 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் தவறானதாகும் என்று நிதி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: