புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு 97 மில்லியன் வருமானம்!
Wednesday, April 18th, 2018
இலங்கை போக்குவரத்து சபை புத்தாண்டு காலத்தில் பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் 13 திகதி வரையான காலப்பகுதியினுள் இலங்கை போக்குவரத்து சபை 97 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுள்ளது.
2017ஆம் ஆண்டு குறித்த காலப்பகுதியினுள் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டிய வருமானம் 85 மில்லியனாகும்.
இதேவேளை கடந்த 15ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் பெற்ற வருமானமே அதிக வருமானமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன் பெறுமதி கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகம்என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி!
ட்ரம்ப் அழுத்தம் கொடுக்க வேண்டும்!
கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் - தகவல்...
|
|
|


