பல்கலைக்கழகத்திற்கு தோற்றிய மாணவர்களுக்காக நிதியுதவி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரல்!
 Thursday, October 27th, 2016
        
                    Thursday, October 27th, 2016
            
முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு சென்ற வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கான நிதியுதவி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியத்தின் தலைவருமான திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திற்கட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இயங்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான நிதியத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களைப் பூரணப்படுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்க முன்பாக ஒப்படைக்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். இதேவேளை ஏற்கனவே விண்ணப்பித்து உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் அதனைக் கடிதம் மூலமாக உறுதிப்படுத்தி அறியத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        