பருத்தித்துறை உணவகங்களில் திடீர் சோதனை!
Wednesday, November 30th, 2016
உணவு வாரத்தை ஒட்டி பருத்தித்துறை நகரத்தில் உள்ள உணவகங்கள் மீது சுகாதாரப் பிரிவினர் அண்மையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சில உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.செந்தூரன் தலைமையில் சுகாதாரப் பரிசோதகர்கள் குழு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்த உணவக உரிமையாளர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
தெலசீமியா நோயை குணப்படுத்த விசேட மருத்துமனை வேண்டும்!
தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்திற்கு தீர்வு - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் அறி...
வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் - மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|


