அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் – ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Friday, November 5th, 2021

தேசிய வேலைத்திட்டங்களிற்கு அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தாலே மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –  தொல்பியல் சின்னங்களை பாதுகாக்கின்ற வேலைத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த பணியை ஆரம்பித்துள்ளோம்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் பொழுது அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட வே்ணடும். அவ்வாறு செயற்படும்போது நாட்டில் இவ்வாறான வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.

அவ்வாறு ஒத்துழைக்கும் பொழுது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களிற்கு சந்தோசத்தை பெற்றுக்கொடுப்பதுடன், வாழ்க்கை தரத்தினையும் உயர்த்த முடியும். நாங்கள் பிரிந்தும், தனித்தனியாகவும் செய்ற்படுத் பொழுது எந்த விடயத்தினையும் செயற்படுத்த முடியாது. அதேவேளை இந்த நாட்டை நல்ல நாடாகவும் மாற்ற முடியாது.

அவ்வாறு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்த வருகின்றோம். அந்த வகையில் கடந்த வெசாக் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத் திட்டம் பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியிலும் இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: